உலகப் பட பூங்கா...!

உலகப் பட அலசல் 001

'லைப் ஈஸ் பியூடிபுள் '


குறிப்புகள் : - 3 ஆஸ்கர் விருதுகள் பெற்ற இத்தாலியப் படம்..!

1997 ஆம் வருடம் வெளியானது . இயக்குனர் ராபர்டோ பெனிக்னி கதாநாயகனாகவும் அவரது மனைவி ப்ராசி கதைனாயகியாகவும் நடித்துள்ளனர்.

1939 இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டம்தான் கதைக்களம். திரைப் பட ரசிகர்கள் அனைவரும் பார்த்தே தீரவேண்டிய திரைக் காவியம் தான் இந்த 'லைப் ஈஸ் பியூடிபுள் '



இனி அலசல்...

முதல் ஷாட் ;-

எல்லையற்ற வானம்.. மலை முகடுகள்.. நடுவே போகிறது ஒரு பாதை..! அதில் சர்வ சுதந்திரமாய் பயணிக்கிறது கதாநாயகன் குயடோ போகும் கார். அதாவ்து, படத்தின் பாத்திரங்கள் அடக்குமுறைகளுக்குள் சிக்கித் தவிக்கப் போகும் இறுதிநிலைக்கு நிலைக்கு நேர் எதிரான நிலையில் துவக்கத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். இது ஒரு நுட்பமான துவக்கம்..!



முதல் காட்சி;-

குய்டோவும் அவன் நண்பனும் வரும் கார் பிரேக் பெய்லியர் ஆகிறது. அதைக் கட்டுபடுத்தும் குய்டோ , காரை ஒரு கூட்டததுள் விடுகிறான். அது அரசருக்கு வரவேற்புத் தரக் கூடியிருக்கும் கூட்டம். விலகிச் செல்லுமாறு குய்டோ சைகை செய்வதை சல்யூட்டாக எண்ணி ஆர்ப்பரிக்கிறது கூட்டம். தனக்கு எதற்கு ராஜ மரியாதை என்று குழப்பமாய்க் கடக்கிறான் குய்டோ. ஆனால் இயக்குனர் அங்கே மிகத் தெளிவாக இருக்கிறார். காரணம் அந்நிகழ்வின் பிறகுதான் அச்சிறுமியிடம் விளையாட்டாகத் தன்னை ஒரு பிரின்ஸ் என்கிறான் குய்டோ.அதுவே அங்கே அடுத்துவரும் கதாநாயகி டோராவை பிரின்சஸ் என்று அழைக்கத் தூண்டுகிறது. அதன் பிறகு குய்டோ டோராவை எப்போதும் பிரின்சஸ் என்றே அழைக்கிறான். அந்த அழைப்புத்தான் பிறகொரு சமயம் பிறந்த நாள் கேக்கில் இருக்கும் பிரின்சஸ் எனும் எழுத்துக்களைப் பார்த்து ஹோட்டலில் குய்டோ இருப்பதாக டோராவுக்குப் புரிய வைக்கிறது..! தவிர டோராவிடம் குய்டோ அப்போது பெரும் முட்டைகளதான் டோராவின் மாப்பிள்ளை தலையில் உடைந்து குயடோவுக்கான வில்லனை உருவாக்குகிறது..!அம முட்டை உடைப்புதான் பிறந்த நாள் விழாவின்போது மீண்டும் நடந்து மாப்பிள்ளைக்கு குயடோவை அடையாளப் படுத்துகிறது.இப்படி, தான் பிறகு எழுப்ப இருக்கும் பிரமாண்ட மாளிகையின் தேவை அறிந்து முதல் காட்சியிலேயே பலமான அஸ்திவாரம் போட்டுத் துவக்குகிறார் இயக்குனர்.



திரைக்கதை;

அசர வைக்கும் உத்தியில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் மீது சென்ற பாதையிலேயே வேறு வடிவத்தில் திரும்பி வரும் ஜாலம் அசாத்தியமானது.



'-சாவி-விடுகதை-தொப்பி-'

குய்டோவும் அவன் நண்பனும் தெரு வழியே போகும்போது ஒரு வீட்டில் மரியா என்று அழைத்தால் மேலிருந்து சாவி விழுகிறது.நண்பனுக்கு வேலை தரும் நபரின் தொப்பி மீது குயடோவுக்கு ஒரு கண்.இருவரும் மாற்றி மாற்றி தொப்பியைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். குய்டோ வேலை செய்யும் ஹோட்டலுக்கு வரும் டாக்டரிடம் விடுகதை போட்டுக்கொண்டே இருக்கிறான் குய்டோ.இந்த சாவி, தொப்பி,விடுகதை மூன்றையும் வேறு இடத்தில அழகாகப் பயன்படுத்துவார் இயக்குனர்.



அதாவ்து ஒரு மழை இரவில் டோராவோடு தனியே பயணிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.அப்போது பேச்சு வாக்கில் டோரா குயடோவின் கேள்விக்கு எஸ் சொல்ல வேண்டுமானால் அதற்கான கீ சொர்கத்திலிருக்கும்மரியாவிடம் இருந்து வரவேண்டும் என்கிறாள். அப்போது அவர்கள் அந்த சாவி விழுகும் வீட்டைக் கடக்கிறார்கள்.உடனே குய்டோ சமயோசிதமாக,' மரியா சாவி ' என்று கத்த வழக்கம்போல் மேலிருந்து சாவி விழுகிறது. இதோசொர்கத்திலிருந்து சாவி வந்துவிட்டது என்று குய்டோ சொல்ல திகைக்கிறாள் டோரா.



அடுத்து டோராவை ஐஸ் க்ரீம் சாப்பிடலாமா என்று கேட்கிறான் குய்டோ.வேண்டாம் என்கிறாள் அவள். அப்போது விடுகதை டாக்டர் அங்கே இருப்பதை கவனிக்கும் குய்டோ,அவர் தான் பழைய கேள்விக்கு விடை சொல்ல தன்னிடம் வருவார் என்று அறிந்து மேலே பார்த்து 'ஒ மரியா நாங்கள் இசெக்ரீம் சாப்பிட இன்னும் எதனை நேரம் உள்ளது? என்று யாரையேனும் அனுப்பிச் சொல்' என்று வேண்டுகிறான். சரியாக அங்கே வரும் டாக்டர் அவனது பழைய கேள்வியின் விடையை 'செவன் செகண்ட்ஸ்" என்று சொல்ல மேலும் வியக்கிறாள் டோரா.



பேசிக்கொண்டே டோரா வீடு வரை வந்தவர்கள் விடை பெறும்போது 'அடடா உன் தொப்பி இப்படி மழையில் நனைந்து விட்டதே ?' என்று கவலைப் படுகிறாள் டோரா.அப்போது அந்த தொப்பிக்காரா அங்கே வருவதை கவனிக்கிறான் குய்டோ. உடனே எதோ வேண்டப் போக, தடுக்கும் டோரா இம்முறை வேண்டுதலை தான் செய்வதாகச் சொல்லி,'ஒ,மரியா யாரையேனும் அனுப்பி என் நண்பனுக்கு ஒரு உலர்ந்த தொப்பியைத் தரச் சொல்' என்று வேண்ட,சரியாக அங்கே வந்து நிற்கும் தொப்பிக்காரர் குய்டோ தலையில் இருக்கும் தான் தொப்பியை எடுத்துக்கொண்டு தன் தொப்பியை வைத்துவிட்டுப் போக வியப்பின் உச்சத்திற்கே போகிறாள் டோரா.

No comments:

Post a Comment