படைப்பாளர் பூங்கா...!

‘உழைப்பாளியின் படைப்புலகு..’

எழுத்தாளர் தி.குழந்தைவேலு பற்றி...

பொள்ளாச்சியில் ஒரு விறகு வெட்டும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தி.குழந்தைவேலு. வெறும் 36 ரூபாய் கட்டணம் கட்ட முடியாமல் 9ம் வகுப்போடு கல்வியை இழந்தவர்.1964ல் அணைக்கட்டு வேலைகளுக்காக மின் வாரியத்தில் அடிப்படை ஊழியராக வேலையில் சேர்ந்தவர் 1994 வரை பல்வேறு இடங்களில் வேலை செய்து ஓய்வு பெற்றிருக்கிறார். காடுகள் வழியாக மின் இணைப்பைக் கொண்டு வரும் பணிகளில் அனுபவம் பெற்றவர், தனது படைப்புகளில் அவ்வனுபவங்களை நிறையப் பதிவு செய்திருக்கிறார்.

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.மேலாண்மை பொன்னுசாமி குழந்தைவேலுவின் கதைக் களம் பற்றி ‘வேறு எந்தக் கொம்பனாலும் முடியாத பாடு பொருள்’ என்று கருத்துச் சொல்லியிருப்பதில் எந்த மிகையுமில்லை. இது போல வெகு சாதாரண ஒரு அடித்தட்டு உழைப்பாளி படைப்பாளியாகும் தருணங்களில்தான் இலக்கியத் தளம் தன்னைப் புனரமைத்துக் கொள்கிறது. உங்கள் புத்தக அலமாரிகளில் தி.குழந்தைவேலுவின் படைப்புகளுக்காக நீங்கள் உருவாக்கும் இடம் சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கான இடமாக மாறும்...

தி.குழந்தைவேலுவின் படைப்பு வரிசை-

1. தலைமுறை நியாயங்கள் (நாவல் - 1997)

2. மின்சார வேர்கள் (நாவல் - 2003)

3.கௌரவம் (நாவல் - 2006)

4.அகலாத நினைவுகள் (சிறுகதைத் தொகுதி - 2008)

5.மலையக மல்லன் (நாவல் - 2009)

தி.குழந்தைவேலு அவர்களின் அலைபேசி - 99940 86155

No comments:

Post a Comment